Connect with us

செய்திகள்

காலை டிபனாக தினசரி இட்லி சாப்பிடலமா?

Published

on

நிறைய வீடுகளில் காலை உணவு பெரும்பாலும் இட்லி தான். ஆனாலும் தினசரி இட்லி மட்டுமே கொடுப்பது குழந்தைகளுக்கு தேவையான சத்துக்களை கொடுக்குமா என்று நம்மில் பலருக்கும் சந்தேகம் தான். சந்தேகமே வேண்டாம். தினசரி காலையில் இட்லியை கொடுப்பது ஆரோக்கியமான விஷயம் தான். இரவு சாப்பாட்டிற்குப் பிறகு வெறும் வயிற்றில் சாப்பிடுகிற இட்லி, போதுமான சத்துக்களை தருகிறதா?

காலையில் எடுத்துக் கொள்ளும் திட உணவு எளிதில் ஜீரணமாகிற வகையில் இருப்பது தான் நல்லது. குழந்தைகள்,பெரியவர்கள் மட்டுமல்ல… நாமும் காலை நேரத்தில் எண்ணெய் பொருட்களை தவிர்த்து விடுதல் மிகவும் நல்லது.மற்ற டிபன் வகைகளில் இல்லாத சிறப்பம்சங்கள் இட்லியில் இருக்கின்றன. இட்லி தயாரிக்க சேர்க்கப்படும் உளுந்து வளரும் குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு அவசியமான தேவை. எலும்புகளைப் பலப்படுத்தவும் உளுந்து பயன்படுகிறது. எண்ணெயில் பொரிக்கப்படாமல், ஆவியில் தயாராகிற எந்த உணவும் வயிற்றுக்கு கெடுதல் செய்வதில்லை.

இட்லியை தொட்டுக் கொள்ள உடைத்தகடலையும், தேங்காயும் சட்னியாக சேருகின்றன. சாம்பாரில் பருப்பும் காய்கறிகளையும் சேர்க்கிறோம். குழந்தைகளுக்கு தேவையான மாவுச் சத்து, புரதச் சத்து, கொழுப்பு சத்து, விட்டமின்கள், தாதுச்சத்துகள் ஆகியவை இட்லி, சட்னி, சாம்பார் கலவையில் கிடைக்கிறது. அதாவது, அரிசியில் மாவுச்சத்தும், உளுந்து மற்றும் பாசிபருப்பு அல்லது துவரம் பருப்பில் புரதச்சத்தும் கிடைக்கிறது. தேங்காயில் தேவையான நல்ல கொழுப்பு உள்ளது. காய்கறிகள் மூலம் விட்டமின்கள் மற்றும் தாதுசத்துக்கள் கிடைக்கின்றன. ஆக மொத்தத்தில் இட்லி நல்ல ஆரோக்கியமான உணவு. தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.


இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இட்லியோடு தொட்டுக் கொள்ள சாம்பார், சட்னி தான் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஜாம்களையோ, சர்க்கரையையோ தரக் கூடாது.
இட்லியில் சத்துக்களை இன்னும் அதிகப்படுத்த விரும்பினால் பீன்ஸ், கேரட், கோஸ் போன்ற காய்கறிகளை பொடியாக நறுக்கி தனியே வேகவைத்துக் கொள்ள வேண்டும்.இந்த காய்கறிகளின் கலவையை இட்லி மாவில் கலந்து இட்லி செய்யலாம்.கலர், கலரான இட்லிகளை பார்த்தவுடன் குழந்தைகள் குஷியாகி விடுவர்.

darbar
செய்திகள்8 hours ago

சும்மா கிழி கிழி…. தர்பார் படத்தின் ஓப்பனிங் பாடல்.. மரணமாஸ் அப்டேட்!

nithya ram
செய்திகள்9 hours ago

தொழிலதிபருடன் காதல்?… 2வது திருமணத்திற்கு தயாராகும் சீரியல் நடிகை

raja
செய்திகள்9 hours ago

ஒரு மில்லியன் பார்வையாளர்கள்.. யுடியூப்பில் ஹிட் அடிக்கும் சைக்கோ பட ‘உன்ன நினைச்சி’ பாடல்

kiran
செய்திகள்11 hours ago

இந்த கவர்ச்சி போதுமா? – படு கவர்ச்சி உடையில் நடிகை கிரண்..

bigil
செய்திகள்12 hours ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

kamal
செய்திகள்13 hours ago

கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை – எதற்கு தெரியுமா?

அரசியல்13 hours ago

கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை ! – இரு வாரங்களுக்கு ஓய்வு

அரசியல்13 hours ago

காடு வா வாங்குது… வீடு போ போங்குது… இந்த வயசுல – ரஜினி கமலை பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு !

asin wedding
செய்திகள்7 days ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

murder
செய்திகள்1 week ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

செய்திகள்18 hours ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

actres ragavi
சின்னத்திரை4 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

oviya
செய்திகள்3 days ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

pooja
செய்திகள்2 weeks ago

அட!.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்7 days ago

அன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி

செய்திகள்3 weeks ago

அய்யோ….துளசி நாயரா இது? -நம்ப மறுக்கும் ரசிகர்கள்

Trending