கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் இதற்கு மேல் அவகாசம் தர முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக கூறியிருந்த நிலையில் இன்று மத்திய அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத காலம் அவகாசம் கேட்டுள்ளது மத்திய அரசு.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது. ஒரே நாளில் மத்திய அரசும், தமிழக அரசும் காவிரி மேலாண்மை குறித்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது