சினிமா துறையில், வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பலர் பாலியலுக்காக பயன்படுத்திக் கொண்டனர் என, அவ்வப்போது திரை பிரபலங்களின் பெயர்களை பட்டியலிட்டு வருபவர் சர்ச்சை நாயகி நடிகை ஸ்ரீரெட்டி.

இந்நிலையில், அலாவுதீன் இயக்கத்தில் , நடிகை ஸ்ரீரெட்டி ‘ரெட்டி டைரி’ என்ற புதிய தமிழ் படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை போராட்டத்தை மையமாக வைத்து உருவாகும் என கூறப்படுகிறது.

இதனிடையே, தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை ‘ரெட்டி டைரி’ படம் மூலம் வெளியிடப் போகிறேன் என்று கொளுத்திப்போட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.

இதனைத் தொடர்ந்து இப்படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என பலதரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், ஸ்ரீரெட்டி, கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சினை பற்றி புதிய குண்டு போட்டுள்ளார்

இது தொடர்பாக ஸ்ரீரெட்டி குறிப்பிடுகையில், “ரொமான்டிக் நபரான சச்சின் ஒருமுறை ஹைதராபாத் வந்தார். அப்போது சார்மிங்கான பெண்ணுடன் ரொமான்ஸ் செய்தார். இதற்கு உயரிய பதவியில் இருந்த சாமுண்டேஸ்வரி சுவாமி என்பவர் உதவி செய்தார்.

சிறந்த மனிதர் ரொமான்சிலும் இவ்வளவு சிறப்பாக விளையாட முடியுமா என்ன? ” என தெரிவித்திருந்தார்.

ஸ்ரீரெட்டியின் இந்த புதிய கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சச்சினின் ரசிகர்கள் பொங்கியெழுந்து தங்களின் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.