சல்மான் கான் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 12’ தனியார்
தொலைக்காட்சியில் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
கடந்த வருட ஹிந்தி பிக் பாஸ் போட்டியை நடிகை ஷில்பா
ஷிண்டே வென்றார். இந்நிலையில், இந்த வருடம் ஹிந்தி பிக்
பாஸ் போட்டியில் கிரிக்கெட் வீரர், ஸ்ரீசாந்த் நுழைந்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக
திழந்தவர், ஸ்ரீசாந்த். கடந்த 2013-ஆம் ஆண்டு, ஐபிஎல் என்னும் 20
ஓவர் கிரிக்கெட் தொடரில் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில்
ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா
ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, 3
வீரர்களுக்கும் பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது.
இதனையடுத்து,இந்த வழக்கில் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 36 பேரை
2015-ஆம் ஆண்டு தில்லி உயர்நீதிமன்றம் விடுவித்தது.

ஸ்ரீசாந்த் தனக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்குமாறு
கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். வழக்கை
விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் அவரை விடுவித்தது. மேலும்,
ஸ்ரீசாந்தக்கு எதிராக பிசிசிஐ மேற்கொண்ட அனைத்து
நடவடிக்கைகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

அதை எதிரித்து பிசிசிஐ மேல்முறையீடு செய்தது. அதனை
கேரள உயர் நீதிமன்ற அமர்வு விசாரித்தது. இந்த அமர்வு, ஒரு
நபர் அடங்கிய அமர்வின் உத்தரவை தள்ளுபடி செய்தது. மேலும்
ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையையும் உறுதி செய்தது.
இதனையடுத்து, ஸ்ரீசாந்த் திரைப்படம், சீரியல் ஆகிய
துறைகளில் நுழைந்துள்ளார்.

இந்நிலையில், இந்த வருடம் ஸ்ரீசாந்த் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 12-ல்17 நபர்களில் ஒருவராக நுழைந்துள்ளார். 2011-ஆம் ஆண்டே பிக் பாஸில் கலந்து கொள்ள நினைத்தேன். ஆனால், அது நடக்கவில்லை. இந்த முறை நுழைந்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியல், ஸ்ரீசாந்த் பங்கேற்றதன் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.