பல்கேரியா படப்பிடிப்பில் இருந்த அஜித் மனைவி ஷாலினியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக சென்னை திரும்பியுள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் அவரது 57-வது படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வருகிறது. இதில் கஜால் அகர்வால், அக்‌ஷராஹாசன் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். இந்தி நடிகர் விவேக் ஒப்ராய் வில்லனாக நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.


சமீபத்தில் அஜித் மோட்டார் சைக்கிளில் சாகசம் (வீலிங்) செய்யும் காட்சி இணையதளத்தில் வெளியானது. இதையடுத்து, அஜித் கறுப்பு டீசர், ஜீன்ஸ் பேண்ட், கண்ணாடி, தொப்பியுடன் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது.

காஜல் அகர்வால் பல்கேரியாவில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் நீர் துளிகள் பனிக்கட்டியாக உறைந்திருப்பதை புகைப்படமாக எடுத்து அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.