சுந்தர்.சி தனக்கு கணவராக அமைந்ததால்தான், தெம்பாக இருப்பதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.

சினிமா, அரசியல், சின்னத்திரை என்று இப்போதும் சுறுசுறுப்பாக வலம் வருபவர் குஷ்பு. அடுத்து, விரைவில் நடைபெற இருக்கும்  தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலிலும் போட்டியிட தயாராகி வருகிறார்.சுந்தர்.சி தனக்கு கணவராக அமைந்ததால்தான், தெம்பாக இருப்பதாக குஷ்பு தெரிவித்து இருக்கிறார். சுந்தர். சி குறித்து தனது  டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள குஷ்பு…

‘என் நிஜ வாழ்க்கை ஹீரோ… என் சிறந்த நண்பர்… நாங்கள் இருதுருவங்கள் என்றாலும் எனது ஆத்ம துணையாக இருக்கிறார்…  அவர் என்னவராக இருப்பதால்தான் தெம்பாக இருக்கிறேன்… என் இனிய கணவர் அவர்…’ என்று தெரிவித்து இருக்கிறார்