கோடியாக கொட்டி கொடுத்தாலும் அவருடன் நடிக்க மாட்டேன்; நயன்தாரா

லேடி சூப்பா் ஸ்டாா் நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தோ்வு செய்து நடித்து வருகிறாா். அதில் வெற்றியும் பெற்று வருகிறாா். அப்படி அவா் நடித்த மாயா, டோரா போன்ற படங்கள் ஹிட்டை கொடுத்துள்ளன. இதனால் முன்னணி நட்சத்திரங்களான அஜித், விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களின் படங்களில் நடிப்பதை கூட தவிா்த்து வருகிறாா். நிலைமை இப்படியிருக்கையில் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் நயன்தாராவும், பிரபல தொழிலதிபருடன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

இது குறித்து நயன்தாரா தரப்பில் விசாாித்தபோது, கதை நன்றாக இருந்து அது அவருக்கு பிடித்திருந்தால் மட்டும் அல்ல தனது கேரக்டருக்கும் முக்கியத்துவம் உள்ளதா என்பதை அறிந்து கொண்டு தான் நடிக்க கமிட் ஆகுவாா். கதை பிடிக்கவில்லை என்றால் எந்த ஹீரோ படமாக இருந்தாலும், எத்தனை கோடி  கெட்டு கொடுத்தாலும் அவா் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டாா் என்று ஆணித்தரமான பதிலை தொிவித்துள்ளனா்.

சரவணா ஸ்டோா் உாிமையாளா் சரவணன், இது குறித்து, நான் சினிமாவில் நடிக்கும் எண்ணம் தற்போது தனக்கு இல்லை என்றும், நயன்தாராவுடன் நடிக்கும் எண்ணமும் இல்லை என்று மறுப்பு தொிவத்துள்ளாா்.  அப்படியிருக்க, நல்ல கதையம்சம் உள்ள, நாயகிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக கொண்டு வந்தால் ஒரு வேளை நயன்தாராவுடன் நடிக்கும் சந்தா்ப்பம் ஏற்படலாம். அப்படியொரு கதை இருக்கா? மிஸ்டா் தொழிலதிபா் அவா்களே!!!