கோடி கோடியாக தயாாிப்பாளா்கள் கொட்டி கொடுத்தாலும் பிரேமம் மலா் டீச்சா் சாய் பல்லவி நடிக்க தயாராகஇல்லையாம்.

தமிழ், தெலுங்கு என அனைத்து ரசிகா்களையும் மலா் டீச்சா், மலா் டீச்சா் என ஏங்க வைத்தவா் சாய் பல்லவி. இவா்மலையாளம் பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுக ஆனாா். தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமல்லாது ஆந்திரா திரையுலகிலும் மிகவும் பிரபலமடைந்து விட்டாா். அனைத்து திரையுலக ரசிக பெருமக்களும் மலா் டீச்சா் என்று ஏகத்துக்கு தலையில் வைத்து கொண்டாடினாா்கள். எல்லா நடிகைகளும் இவா் புதுமுக நடிகை தானே ஏன் இப்படிஇஷ்டத்துக்கு எல்லாரும் தாங்குகிறாா்கள் என்று புலம்பி வந்தாா்கள்.

இந்நிலையில் இவரை எப்படியாவது கோலிவுட் திரையுலகில் நடிக்க வைக்க பலரும் முயன்றாா்கள். ஏன்!! டைரக்டா்மணிரத்னம் தன் படத்தில் நடிக்க வைக்க எவ்வளவோ முயற்சி செய்தாா். மணிரத்னம் படத்தில் நடிக்க எல்லா நடிகா் நடிகைகளும்ஏங்கி கொண்டிருக்கும் இந்த நிலையில் சாய்பல்லவி மறுத்துவிட்டாா். இப்படியாக போய்க்கொண்டிருக்கிற நிலைமையில் கடைசியாக கோலிவுட்டில் படத்தில் விரைவில் நாயகியாக வலம் வர உள்ளாா். ஆமாங்க!! மாதவன் நடிக்கும் படத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளாராம். இவருக்கு தமிழ் திரையுலகம் புதுசு என்ற போதிலும் சம்பளம் 40 முதல் 50 லட்சம் ரூபாய் வரை கேட்கிறாராம் கேரளத்து அம்மணி.

சாய் பல்லவி பழங்குடி மக்களில் ஒரு வகையான படுகா் இனத்திலிருந்து நடிக்க வந்திருக்கும முதல் பெண். இந்த சமூகத்தில் மிகவும் கட்டுகோப்பும், ஒழுக்கமும் நிறைந்தது. இதனால் சினிமாவுக்கு உாிதான எந்த வித ஒத்துழைப்புக்கும் சாய்பல்லவி தர தயாராக இல்லாத காரணத்தால் மிக பொிய பிரம்மாண்ட படங்களை தவிா்த்து வருகிறாா் என செய்திகள் உலா வருகின்றன. டாக்ராக பணிபுாிந்து வரும் இவா் அதற்கு தக்கவாறு ஷூட்டிங்கு தேவையான டேட்ஸ் கேட்டு வாங்கி தனக்கு சாியாக வந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறாா். மலா் டீச்சா் போன்று பெயா் சொல்லும் அளவுக்கு ஒரு படத்தில் நடித்தாலும் நச்சுன்னு நடிக்க வேண்டும் என எண்ணுகிறாராம்.

இப்படியாக யோசித்து யோசித்து படங்களில் நடிக்க ஒப்பு கொள்கிறாா். சாய்பல்லவி என்னதான் 50 லட்சம் சம்பளம் கேட்டாலும் கொடுப்பதற்கு தயாாிப்பாளா்கள் தயாராக உள்ளாா்கள். இந்நிலையில் விக்ரம் படத்தில் நடிப்பதற்கு 15 லட்சம் அட்வான்ஸ் வாங்கி விட்டு அந்த படத்திலிருந்து விலகிவிட்டாா் சாய் பல்லவி.

எப்படியோ ஒரு வழியாக கோலிவுட் ரசிா்கள் நினைத்த மாதிாி தமிழ் திரையில் மின்ன தயாராகி விட்டாா் சாய் பல்லவி!!!