பிரபல ஆபாச நடிகையும், பாலிவுட் கவர்ச்சி நடிகையுமான சன்னிலியோன் கனடாவை சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் அதே கனடா நாட்டை சேர்ந்த ஆபாச நடிகை ஆகஸ்ட் அமீஸ் என்பவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 200க்கும் அதிகமான ஆபாச படங்களில் நடித்த ஆகஸ்ட் அமீஸ், சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது நட்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் ஆகஸ்ட் அமீஸ் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இந்த தகவலை அவரது கணவர் கெவின் மூர் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த உலகில் எனக்கு இருந்த ஒரே நல்ல துணை அவர், இது எங்கள் குடும்பத்தின் தனிப்பட்ட விஷயம், தயவுசெய்து எங்களை தனியே விடுங்கள் என்று ஆகஸ்ட் அமீஸ் மீடியாக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.