சபதத்தில் வெற்றி பெற்ற சமந்தா! இனி அவரை யாரும் நெருங்க முடியாதாம்

அஜித் தவிர கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துவிட்ட நடிகை சமந்தா விரைவில் காதலர் அகிலை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இருப்பினும் அவர் தற்போது பிசியான நடிகைகளில் ஒருவராகத்தான் உள்ளார். இளையதளபதி விஜய்யுடன் ‘தளபதி 61’, விஷாலுடன் ‘இரும்புத்திரை’, விஜய்சேதுபதியுடன் ‘அநீதி கதைகள்’ மற்றும் மூன்று தெலுங்கு படங்களில் நடித்து வரும் சமந்தா சமீபத்தில் தனது தோழிகளிடம் சவால் ஒன்றை விட்டிருந்தாராம்

அந்த சவால்தான் சிலம்பம் கற்க வேண்டும் என்பது. சிலம்பம் என்பது ஆண்களின் விளையாட்டு என்று தெரிந்தும் சிலம்பத்தை முறையாக கற்று அதில் பெரிய ஆளாக வேண்டும் என்ற தனது சவாலை சமீபத்தில் நிறைவேற்றியுள்ளாராம் சமந்தா. இதை உறுதி செய்யும் வகையில் சமந்தாவின் சிலம்பாட்ட வீடியோ ஒன்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் பல ஆண்டுகள் தேர்ச்சி பெற்ற தேர்ந்த சிலம்பாட்டக்காரர் போல அவர் கம்பு சுற்றுவதை பார்த்து அவரது ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும் முறைப்படி சிலம்பத்தை அவர் கற்றுள்ளதால் தவறான நோக்கத்துடன் அவரை யாரும் நெருங்க முடியாது என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இனிமேல் எந்த இயக்குனராவது சிலம்பம் சுற்றும் கேரக்டர்களுடன் கூடிய படம் எடுத்தால் தாராளமாக சமந்தாவை ஒப்பந்தம் செய்யலாம் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.