சமந்தாவுக்கு விரைவில் டும்..டும்..டும்…

05:29 மணி

நாகசைதன்யா – சமந்தா திருமண நிச்சயதார்த்தம் ஜனவரி மாதம் 29-ந்தேதி நடைபெற உள்ளதாக தெலுங்கு பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவும்- சமந்தாவும் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். இவர்களுடைய திருமணத்துக்கு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டனர். நாகார்ஜுனாவின் இளையமகன் அகில் காதலித்த ஸ்ரேயா பூபல் என்ற பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களுடைய நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடந்தது. திருமணம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது.


நாகசைதன்யா- சமந்தா திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இவர்கள் இருவரும் புதிய படங்களில் நடித்து வருகிறார்கள். எனவே எப்போது திருமணம் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இப்போது இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் வருகிற ஜனவரி மாதம் 29-ந்தேதி நடைபெற இருக்கிறது.

இதை குடும்பத்தினர், உறவினர்களுடன் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெலுங்கு பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com