சென்னையில் மேற்குவங்க மேஸ்திரி ஒருவர் அவரின் கள்ளக்காதலியால் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த மேஸ்திரியான அபிஜித் என்பவர் சென்னை ஐசிஎப் காலணியில் ஒரு கட்டிடத்தில் நடைபெற்று வரும் கட்டிடப்பணிகளுக்கு தலைமை மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். அங்கு மேற்குவங்கத்தை சேர்ந்த ஜோசன்னா என்ற பெண் சமையல்காரியாக பணியாற்றி வந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  ஈ.சி.ஆரில் விதிகளை மீறி பங்களா கட்டிய கமல்?

அபிஜித்திற்கு ஜோசன்னாவுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சமீபத்தில் திடீரென அபிஜித் காணாமல் போனார்.

இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டதன்பேரில், போலீஸார் ஜோசன்னாவை பிடித்து விசாரித்தனர். இறுதியில் ஜோசன்னா தான் தனது மற்றொரு கள்ளக்காதலனை வைத்து அபிஜித்தை கடத்தி அவரிடம் பணம் பறித்தது தெரியவந்தது.

இதையும் படிங்க பாஸ்-  கேப்டன் இஸ் பேக் - பிரச்சாரத்திற்கு வருகிறார் விஜயகாந்த்

இதையடுத்து போலீஸார் கடத்தப்பட்ட அபிஜித்தை மீட்டனர். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு இந்த சம்பவம் சரியான எடுத்துக்காட்டு.