சுட்டெரிக்கும் வெயில்…. அம்மாடி எவ்ளோ வெயில் அடிக்குது… ஆனா என்னங்க நம்ம ஊருக்கு வெயில் தானே அடையாளம்.. இந்த வெயிலிலும் ஸ்டைலா வலம் வர சில டிப்ஸ்…

1. பருத்தி ஆடை

வெயிலுக்கு நண்பன் பருத்தி. வெயில் நாட்களில் பெரும்பாலும் காட்டன் ஆடைகளை அணிவது பெஸ்ட். இந்த ஆடை நம் வியர்வையை சீக்கிரம் உரிஞ்சிவது அதைவிட சீக்கிரம் காஞ்சிடும். பருத்தி ஆடை ட்ரெண்ட் இப்போ பிரபலமாயிட்டும் வருது.

2. சன் கிளாஸ்

நீங்க என்ன ஆடை போட்டாலும் உங்கள் முகத்துக்கு ஏற்ற சன் கிளாஸ் உங்கள் தோற்றத்தை இன்னும் அழகாக்கிடும். சூரியன்ல UV Rays எனப்படற ஊதா கதிர்கள் கிட்ட இருந்து நம்ம கண்களை பாதுகாக்கும். சூரிய ஒளியை நேரடியா பார்ப்பதால் சில பேருக்கு தலைவலி ஏற்படலாம். சன் கிளாஸ் பயன்படுத்தினால் இது கட்டுப்படும்.

3. ஸ்டோல் / துப்பட்டா

ஸ்டோல் ஆடைக்கு சம்மர் ஃபேஷன்ல முக்கிய இடம் இருக்கு, காரணம் இதை ஸ்டைலா பல வழிகளில் அணியலாம். நீங்க வெஸ்டர்ன், இன்டொ-வெஸ்டர்ன் ட்ரடிஷ்னல்னு என்ன ஆடை ரகம் அணிஞ்சாலும் அத்தனைக்கும் ஸ்டோல் கட்சுதமா பொருந்தும்.

4. காலணி

ஷூ வகைகளை விடவும் சேண்டல்/ஸ்லிப்பர் (Flip-Flops) அணிவது நல்லது.
வெயிலில் சிலருக்கு பாதம் வியர்க்கும், இது பல கிருமிகளையும் உருவாக்கும்.

சம்மர் ஒரு அழகான பருவகாலம்ங்க, அதையும் கொஞ்சம் ரசிக்கலாமே.