ஹைதராபாத்: 5 வயது சிறுமியை பள்ளி வளாகத்தில் வைத்து,
அதன் ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார்
பள்ளியில், 5 வயது சிறுமி ஒருவர் யுகேஜி பயின்று வருகிறார்.

இதனிடையே, அண்மையில் அப்பள்ளியில் பணியாற்றும்
ஊழியர் ஒருவர், அச்சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக
ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பிய அந்த சிறுமியை, பள்ளி ஊழியர்
ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துபோய் பாலியல்
பலாத்காரம் செய்தார். இதில், அச்சிறுமி காயமடைந்தார்.

இதுகுறித்து அச்சிறுமி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்,
கோல்கொண்டா காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார்
அளித்தனர்.

இச்சம்பவம் குறித்து, காவல் துறையினர் போஸ்கோ சட்டத்தின்
கீழ் வழக்குப்பதிந்து, சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது
செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் குறித்து கேள்விப்பட்ட, அப்பகுதி மக்கள், பள்ளி
சொத்துகளை சேதப்படுத்தினர். இதனால், அப்பகுதியில்
பதற்றம் நிலவியது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது