துப்பாக்கி, பஞ்ச தந்திரம், தெனாலி, உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ஜெயராம். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் நடிகை ரிமி கலகலப்பான கேள்விகள் கேட்டார். ‘இதுவரை நீங்கள் நடித்த நடிகைகளில் மிகவும் அழகான நடிகை யார்?’ என்பதும் அதில் ஒரு கேள்வி. அதற்கு ஜெயராம் ருசிகர பதில் அளித்தார்.

    இதுவரை 100 நடிகைளுக்கு மேல் ஜோடியாக நான் நடித்திருக்கிறேன். அவர்களில் 100 பேருக்குமே நான் தாலி கட்டும் காட்சியில் நடித்துள்ளேன்.இதில் நீங்களும் ஒருவர் (கேள்வி கேட்ட நடிகை ரிமி). இந்த நடிகைகளில் அழகானவர் யார் என்று குறிப்பாக சொல்ல முடியாது. ஏனென்றால் அது நடிகைக்கு நடிகை மாறுபடும். என்னைப் பொறுத்தவரை மிகவும் அழகானவரை நான் என் வீட்டுக்கு தாலி கட்டி அழைத்துச் சென்று விட்டேன்.

  

  அவர் வேறு யாருமல்ல என் மனைவி பார்வதி.1992ம் ஆண்டு பார்வதியை நான் மணந்தேன்.அப்போது அவர் முன்னணி நடிகையாக இருந்தார்.  குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புவதால் இனி நடிக்க மாட்டேன் என்று அப்போதே அவர் தெரிவித்தார். அதை நான் ஏற்றுக்கொண்டேன். இவ்வாறு ஜெயராம் கூறினார். ஜெயராம், பார்வதிக்கு காளிதாஸ் என்ற மகன், மாளவிகா என்ற மகள் உள்ளனர். இவர்களில் காளிதாஸ் தமிழில் மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் ஹீரோவாக நடித்தவர்.