சிறையில் வாடும் சிதம்பரத்தை வாழ்த்தி போஸ்டர் …பிறந்த நாள் கொண்டாடிய தொண்டர்கள்…!

தேசத்தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளில் செல்வாக்குடன் பிறந்தவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். அப்படி தமிழகத்தில் கொடைவள்ளலாகவும், கல்வி வள்ளலாகவும் அறியப்பட்டவர் சர். அண்ணாமலை செட்டியார். அவரது பேரன்தான் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம்.

ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் முறைகேடாக பணம் பெற்றதாக ப. சிதம்பரம் குற்றம்சாட்டப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்களை அரசியல்வாதிகள் தெரிவித்துவருகின்றனர்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில்தான், ப.சிதம்பரம் மீது மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறினாலும் கூட, சிபிஐ, நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தில் பல அதிரடி முக்கிய விசாரணைகளை நடத்தி வருகிறது.
ப. சிதம்பரம் அமைச்சராக பதவிவகித்த வந்த காலத்தில்தான், இந்த முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் அவர் மீது இந்த வழக்கைப் பதிந்து, நீதிமன்றத்தில் தக்க ஆதரங்களை சமர்பித்துள்ளனர்.

எனவே, ஆதாரமில்லாமல், அமலாக்கத்துறையினர் மற்றும் சிபியை இந்த வழக்கை கையில் எடுத்து சிதம்பரத்தை குற்றம்சாட்ட வேண்டிய தனிப்பட்ட விரோதம் எதுவுமில்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.

இந்த நிலையில், ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனத்தை, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்தின் முக்கிய ஆலோசகராக நியமித்து அதன் வழியாக பல கோடி ரூபாய் பரிமாற்றம் நடந்ததாக , அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜி சிபிஐயிடம் கூறியுள்ளதாக செய்திகளில் வந்தது. ஆனால் தான் இந்திராணி முகர்ஜியை பார்த்ததேயில்லை, அவர் யார் என்றே தெரியாது என கார்த்திக் சிதம்பரம் கூறிவருவதுதான் வேடிக்கை. இதற்கான ஆதாரத்தை சிபிஐ போலீஸார் தேடிவருகிறார்கள்.

இதிலும், சில நாட்களுக்கு முன்னர் சிதம்பரம், தன் குடும்பத்தின் சார்பில் ஒரு டுவிட் பதிவு செய்திருந்தார். அதில் ‘அதிகாரிகளை விட்டு, தன்னை ஏன் கைது செய்தார்கள் என மக்கள் தன்னிடம் கேள்வி எழுப்பிவருவதாக ‘ அவர் அதில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று திகார் சிறையில், தனது 74 வது பிறந்த நாள் கொண்டாடும் ப.சிதம்பரத்துக்கு அவரது ஆதரவாளர்கள், பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து அவரது பிறந்த நாளை கொண்டாடிவருகின்றனர். அதில், கல்விக் கடன் வழங்கியும், பயங்கரவாதத்திலிருந்து பாரதத்தை காத்திடும் எங்களின் கடவுளே ! வாழ்க பல்லாண்டு என எழுதப்பட்ட வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

பல வங்கிகள் மாணவர்கள் படிப்பதற்கு கடன் தராமல் இழுத்தடித்து வந்த காலத்தில், ஏழை மாணவர்கள் சிரமப்பட்டனர். அந்த சமயத்தில், சிதம்பரம் அமைச்சராக இருந்த போது, அனைத்து மேல்படிப்பு படிக்கின்ற மாணவர்களுக்கும் கல்வி கடன் வழங்கவும் மற்றும் விவசாயிகளுக்கு விவசாய கடன் கிடைக்கவும் ஆணைகள் பிறப்பித்து வழிவகை செய்தார். இது மாணவர்களின் கல்விப் புரட்சியாகவே அந்தக் காலகட்டத்தில் பார்க்கப்பட்டது என்பதை நம்மால் மறுக்க முடியாது. இந்த நிலையில் இன்று சிறையில் பிறந்தநாள் கொண்டாடியுள்ள இந்திய அரசியலின் மூத்த அரசியல்வாதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரின் அரசியல் இமேஜ் இனிவரும் காலங்களில் இந்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் அளிக்கவுள்ள தீர்ப்பை பொறுத்தே அமையும்.

Recent Posts

தற்போது இணையத்தை கலக்கி வரும் காப்பான் பட நீக்கப்பட்ட காட்சிகள்..!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்து அதனுடன் அகரம் என்ற தொண்டு நிறுவனம் ஏழை எளிய பிள்ளைகளின் கல்வி கனவை நினைவாக்கியவர் நடிகர் சூர்யா… Read More

2 hours ago

தன் மீது ஏற்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா…?

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பதிய வைத்துள்ள நடிகை தமன்னா இவர் முதன் முதலில் 'கேடி' என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார்… Read More

3 hours ago

நன்றி கூற வார்த்தைகள் இல்லை – தர்ஷன் வெளியிட்ட வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட தர்ஷன் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். Biggboss Darshan says thank to his supporters - பிக்பாஸ்… Read More

5 hours ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

இந்தியா முழுவதும் வங்கிகள் இயங்கும் நேரம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. Public sector Banking hours is set right today - இந்தியாவில் பல பொதுத்துறை வங்கிகள் செயல்படுகிறது.… Read More

6 hours ago

பூம்ரா பந்துவீச்சில் எந்த மாற்றமும் இருக்காது – ஆஷிஷ் நெஹ்ரா நம்பிக்கை !

முதுகுத்தண்டில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ள இந்திய அணியின் பந்துவீச்சாளர் பூம்ராவின் பந்துவீச்சு முறையில் எந்த மாற்றமும் இருக்காது என நெஹ்ரா… Read More

10 hours ago

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏன் போனேன்? ஏன் வெளியேறினேன்? – கவின் விளக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது முதல் வெளியேறியது வரை நடிகர் கவின் விளக்கம் அளித்துள்ளார். Actor Kavin felt sorry to his supporters - பிக்பாஸ் நிகழ்ச்சியில்… Read More

10 hours ago