சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ நாளை வெளியீடு! ரசிகர்கள் உற்சாகம்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சீமராஜா’.

இப்படத்தில், சமந்தா, நெப்போலியன், சிம்ரன், கீர்த்தி சுரேஷ், சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

‘சீமராஜா’ திரைப்படத்துக்கு இசை: டி.இமான், ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியம், பாடல்கள்: யுகபாரதி, எடிட்டிங்: விவேக் ஹர்சன்.

இதில், சிவகார்த்திகேயன் தமிழ் மன்னராக நடித்திருப்பார். இப்படம் நகைச்சுவை நிறைந்ததாகவும் இருக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், ‘சீமராஜா’ திரைப்படம் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, நாளை (செப்.13) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

‘சீமராஜா’ படம் நாளை வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகத்திலும், கொண்டாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.