தமிழ் திரையுலகில் பலரது தன்னம்பிக்கைக்கு விதையாக பார்க்கப்படுபவர் நம்ம தல அஜித். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான இவருடன் நடிக்கிறது பலருக்கு மிகப்பெரிய கனவு. அந்த கனவு தமிழ் சினிமாவுல இருக்குற பலருக்கும் நிறைவேறவில்லை. இன்றைக்கு டாப் நடிகராக மாறிவிட்ட சிவகார்த்திகேயன். சினிமாவில் நடிக்க வந்த புதிதில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தார். அவர் முதல்முதலாக நடித்தது அஜித் நடித்த ஏகன் படத்தில் தான். அதில் மாணவராக புத்தகத்தை தூக்கிக்கொண்டு வருவார். அதை நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

தற்போது விஸ்வாசம் படத்தின் புகைப்பட கலைஞராக உள்ள சிற்றரசு ஒரு பேட்டியில் அந்த புகைப்படத்தை காட்டியுள்ளார், அதன் பிறகு தான் பல ரசிகர்கள் வலையில் வீசி தேடி, அஜித்தையும், சிவகார்த்திகேயனும் ஏகன் படத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

முதல் படமே அஜித்துடன், அடுத்தது தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில்,… இந்த மாதிரி அதிர்ஷ்டம் யாருக்கு அமையும் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் முணுமுணுப்பது எல்லோருக்குமே சத்தமாக கேட்கிறது.