இளையதளபதி விஜய் சிவாஜி கணேசனுடன் ‘ஒன்ஸ்மோர்’ என்ற ஒரே ஒரு படத்தில் நடித்திருந்தாலும், அவருக்கும் சிவாஜி குடும்பத்தினர்களுக்கும் இடையே நெருக்கமான நட்பு உண்டு.

இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு அனுமதி பெற்று ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது என்பது தெரிந்ததே. இந்த படப்பிடிப்பு இரண்டு நாள் விக்டோரியா ஹாலிலும், ஒருநாள் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டிலும் நடந்தது.

ஏற்கனவே இதே அன்னை இல்லம் வீட்டில் விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.