கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள், என்ற பாடலை சிறுவயதில் எல்லோரும் கேட்டிருப்போம். இதன்படி படித்தாலும் படிக்காவிட்டாலும் கைத்தொழில் ஒன்று நமக்குத் தெரிந்திருந்தால் வாழ்வில் எங்கு இருந்தாலும் நாம் பிழைத்துக் கொள்ளலாம். தற்போது படித்தவர்களுக்கு வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக மாறிவிட்டது. அலுவலகத்திற்குள் உட்கார்ந்தே 8 மணி நேரம் வேலை செய்து சம்பளம் வாங்கும் வேலைகளில் சேர்வது என்பது இப்போது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிட்டது. எனவே இனிவரும் காலங்களில் கைத்தொழில்கள் எதையாவது கற்றுக் கொண்டு சம்பாதித்தால் வாழ்வில் முன்னேற முடியும். சென்னை போன்ற பெருநகரங்களில் பல்வேறு தொழில்களுக்கு ஆட்கள் தேவை என்பது அதிகமாகவே உள்ளது. குறிப்பாக உடல் உழைப்பு தொழில்களுக்கு சென்னையில் எப்போதும் மவுசு அதிகம்.

சென்னையில் டீ மாஸ்டர் பரோட்டா மாஸ்டர் உள்பட சமையல்கலை தெரிந்தவர்களின் தேவை தற்போது அதிகமாக உள்ளது. இதேபோல் பல்வேறு தொழில் தெரிந்தவர்களுக்கு வேலை அதிகமாக உள்ளது. அந்த வகையில் இளநீர் சிவ தெரிந்தால் தெரிந்தால் இளநீர் சிவ தெரிந்தால் தெரிந்தால் சென்னையில் ரூபாய் 32 ஆயிரம் ஆயிரம் வரை சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என இன்றைய தினத்தந்தி வரி விளம்பரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அந்த விளம்பரத்தில் உள்ள நண்பரை தொடர்பு கொண்டு கேட்டபோது ஆம் உண்மை தான் இந்த தகவல் நாளை காலை நீங்கள் ஆழ்வார்ப்பேட்டையில் எங்கள் இடத்திற்கு வாருங்கள் என்று நம்மை அழைத்தார். அதன் விவரங்களை இப்போது உங்கள் பார்வைக்கு…
சம்பளம் ரூ.22,000 – ரூ.32,000

இன்றைய (15.03.19) தினத்தந்தியில் வரி விளம்பரம் பகுதியில் வந்திருக்கும் விளம்பரம்:

இளநீர் சீவ சம்பளம் ரூ.22,000 to ரூ.32,000 – 51/31, பீமன்னா 1st st, ஆழ்வார்பேட், Chn. 9840824174

தொழில் தெரிந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.