சென்னையில் ஒரு கோடி ரூபாய் ஓப்பனிங் வசூலை அள்ளிய ‘அறம்’

04:32 மணி

Loading...

கோலிவுட் திரையுலகில் ஓப்பனிங் வசூலாக ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூல் ஆவது பெரிய ஸ்டார்களின் படங்களாக மட்டுமே இருந்துள்ளது. இதுவரை நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள எந்த படமும் ஒரு கோடி ரூபாய் ஓப்பனிங் வசூல் பெற்றிராத நிலையில் முதல் முறையாக சென்னையில் நயன்தாராவின் ‘அறம்’ திரைப்படம் ரூ.1 கோடிக்கும் மேல் ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது.

இந்த படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.1,02,81,259 வசூல் செய்துள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த படம் நல்ல வசூலை பெற்றுள்ளதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இதே தயாரிப்பு நிறுவனம் மீண்டும் நயன்தாரா நடிப்பில் ‘அறம் 2’ படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

(Visited 16 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393