உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க மிஷ்கின் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் சைக்கோ. இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். பிசி ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

உதயநிதியுடன் ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். மிஷ்கின் வித்தியாசமான ஸ்டைலான இரவு நேர காட்சிகளே அதிகம் படத்தில் இடம்பெறும் என்பதை ரசிகர்கள் நினைப்பதை நிரூபிப்பதை போல முதல்கட்ட படப்பிடிப்பு இரவிலேயே நடந்து முடிந்துள்ளது.

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது என உதய் டுவிட் செய்துள்ளார்.