‘சைமா’ 2018 ‘மெர்சல்’ திரைப்படத்திற்கு 5 விருதுகள்

தென்னிந்திய மொழிப் படங்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டு தோறும் தென்னிந்திய திரைப்பட சர்வதேச விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

2018-ஆம் ஆண்டுக்கான சைமா விருதுகள் வழங்கும் விழா துபாயில் கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளைச் சேரந்த கலைஞர்கள் பலரும் பங்கேற்றனர்.

இதில் சிறந்த நடிகருக்கான விருது சிவகார்த்தியேன்(வேலைக்காரன்) மற்றும் மாதவன் (விக்ரம் வேதா), சிறந்த நடிகைக்கான விருது நயன்தாரா (அறம்) மற்றும் அதிதி பாலன் (அருவி) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

அதேபோல், வாழ்நாள் சாதனையாளர் விருது பிரபல பாடகி பி.சி.சுசீலாவிற்கு வழங்கப்பட்டது. இளம் தலைமுறையினருக்கான யூத் ஐகான் விருது ஹன்சிகாவுக்கு வழங்கப்பட்டது.

இவ்விழாவில், விஜய் நடித்த வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘மெர்சல்’ திரைப்படத்திற்கு மட்டும் 5 விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த இயக்குநர்   அட்லி
வில்லன்                   எஸ்.ஜே.சூர்யா
பின்னணி பாடகர்    சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்          விவேக்

மேலும், சிறந்த திரைப்படம்: விக்ரம் வேதா
சிறந்த துணை நடிகர்           : எம் எஸ் பாஸ்கர் (8 தோட்டாக்கள்)
சிறந்த துணை நடிகை         : சிவதா (அதே கண்கள்)
சிறந்த வில்லன் நடிகர்         : எஸ் ஜே சூர்யா (மெர்சல் & ஸ்பைடர்)
சிறந்த இசையமைப்பாளர்  : ஏஆர் ரஹ்மான் (மெர்சல்)
சிறந்த பாடலாசிரியர்           : விவேக் (ஆளப்போறான் தமிழன் – மெர்சல்)
சிறந்த பின்னணிப் பாடகர்  : சித் ஸ்ரீராம் (மெர்சல்)
சிறந்த பின்னணிப் பாடகி   : லக்ஸ்மி சிவனேஷ்வரலிங்கம் (போகன்)
சிறந்த அறிமுக நடிகர்         : வசந்த் ரவி (தரமணி)
சிறந்த அறிமுக நடிகை       : அதிதி ராவ் ஹைத்ரி (காற்று வெளியிடை)
சிறந்த அறிமுக இயக்குனர்: அருண் பிரபு புருஷோத்தமன் (அருவி)
சிறந்த காமெடி நடிகர்         : சூரி (சங்கிளி புங்கிளி கதவ தொற)
சிறந்த ஒளிப்பதிவாளர்        : ரவி வர்மன் (காற்று வெளியிடை)