ஜனவரி 12ல் வருகிறான் பைரவா

05:02 மணி

பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம் உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ் வழங்கும் புதிய படம் பைரவா.

Loading...

இளைய தளபதி விஜய் நடிக்கும் பைரவா படத்தை ஏராளமான பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்.  நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி – பரதன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவர்களுடன் ஜெகபதிபாபு, சதீஷ், ஒய்.ஜி.மகேந்திரன், தம்பி ராமைய்யா, டேனியல் பாலாஜி, மைம் கோபி, ‘ஆடுகளம்’ நரேன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

பைரவா திரைப்படத்தின் டீசர் வெற்றிக்கு பின் பைரவா ட்ரைலர்  டிசம்பர் 31 ஆம் தேதி இரவு வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்றது. இது வரை தமிழ் சினிமாவில் வெளிவந்த ட்ரைலர்கள் படைத்த சாதனைகள் அனைத்தையும் முறியடித்து.  U  சான்றிதழ் பெற்றுள்ள பைரவா பொங்கல் விருந்தாக வருகிற ஜனவரி 12 தேதி திரைக்கு வருகிறது.

(Visited 6 times, 1 visits today)
The following two tabs change content below.
கோ.வெங்கடேசன்

கோ.வெங்கடேசன்

இவர் கடந்த 7 ஆண்டுகளாக தமிழ் சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ் திரையுலகம் பற்றிய பல அறிய தகவல்களை தொகுத்து வங்குவதில் சிறப்பானவர். இவரை தொடர்புகொள்ள: 9715029812