வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகின்றது பாசஞ்சர்ஸ் திரைப்படம்

இந்திய ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த  ஹாலிவுட் கதாபாத்திரங்கள்  பல உண்டு. அவற்றுள் ‘மிஸ்டிக்’ என்னும் ‘X – MEN’ படத்தின் கதாபாத்திரமும், ‘ஸ்டார் லார்ட்’ என்னும் ‘தி கார்டியன்ஸ் ஆப் கேலக்சி’ படத்தின் கதாபாத்திரமும் அடங்கும்…. இந்த கதாபாத்திரங்களில் கன கச்சிதமாக நடித்த ஜெனிபர் லாரன்ஸ் மற்றும் கிறிஸ் பிராட்  ஆகியோர், தற்போது இந்திய ரசிகர்கள் மத்தியில்  அமோக   எதிர்பார்ப்பை பெற்று வரும்   ‘பாசஞ்சர்ஸ்’  திரைப்படத்தில் இணைந்திருக்கின்றனர். இயக்குநர் மோர்டென் டில்டம் கற்பனையில் (இயக்கத்தில்), ஜான் ஸ்பீஹ்ட்ஸ் எழுத்தில் உருவாகி இருக்கும் ‘பாசஞ்சர்ஸ்’  திரைப்படத்தை நீல் எச் மோரிட்ஸ் – ஸ்டீபன் ஹமேல் – மைக்கேல் மாஹிர் மற்றும் ஓரிமார்மர் ஆகியோர் தயாரித்து இருக்கின்றனர். விண்வெளி மற்றும் அறிவியல்  சார்ந்த பாணியில் உருவாகி இருக்கும் இந்த ‘பாசஞ்சர்ஸ்’  படத்தில் ஜெனிபர் லாரன்ஸ்,  கிறிஸ் பிராட், மைக்கேல் ஷீன், லாரன்ஸ் பிஷ்பூர்ணே, ஆண்டி கார்சியா முன்னணி கதாபாத்திரங்களில்   நடித்திருக்கும் ‘பாசஞ்சர்ஸ்’ வருகின்ற ஜனவரி மாதம் 6 ஆம் தேதி அன்று, இந்தியாவில் வெளியாகின்றது.

வேறொரு கிரகத்தில் உயிர் வாழும் தன்மையை பற்றி கண்டறிய  விண்வெளி கப்பலில் செல்கின்றனர் அரோரா  (ஜெனிபர் லாரன்ஸ்) மற்றும் ஜிம் (கிறிஸ் பிராட்) ஆனால் விண்வெளி  எந்திர கோளாறு காரணமாக,   அவர்கள் 90 வருடம் முன்னதாகவே தங்களின் ‘விண்வெளி உறக்கத்தில்’ இருந்து எழுப்பப்பட்டு விடுகின்றனர்….. அதற்கு என்ன காரணம் என்பதை ஆராயும் பொழுது அவர்கள் இருவருக்கும் காதல் மலர்கின்றது. இருவரும் தங்களின் இலக்கை அடைந்தார்களா? ஏன் அவர்கள் 90 வருடம் முன்னதாகவே எழுப்பட்டார்கள் என்பதை கண்டு பிடித்தார்களா? என்பது தான் ‘பாசஞ்சர்ஸ்’ படத்தின் கதை.

இந்தியா முழுவதும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், 3 டி தொழில் நுட்பத்தில் வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதி அன்று பாசஞ்சர்ஸ் திரைப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.