பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த ‘நாச்சியார்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. முதல்முறையாக ஜிவி பிரகாஷை நடிக்க வைத்த பெருமைக்குரியவர் பாலா என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில் நாச்சியார் வெற்றிக்கு பின்னர் மூன்று பிரபல இயக்குனர்கள் ஜிவி பிரகாஷிடம் கதை கூறியுள்ளனர். அவர்கள் ‘அறம்’ இயக்குனர் கோபி, வசந்தபாலன் மற்றும் இயக்குனர் ராம்

மூன்றுமே வெவ்வேறு ஸ்கிரிப்டுகள் என்பதால் மூன்றையும் ஒப்புக்கொள்ள ஜிவி பிரகாஷ் முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் இந்த படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது