ஜுலியை 300-பேர் சுற்றி வளைத்தார்களா? நகைக்கடையில் நடந்தது என்ன?

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டவர் என்ற அடைமொழியுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டவர் ஜுலி. இதனால், அவர்மீது பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது. மக்களுடைய ஆதரவும் அவருக்கு இருந்தது. ஆனால், பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் நடந்துகொண்ட விதம் மக்கள் மத்தியில் அவர்மீது பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, மக்களால் அவர் வீட்டுக்கள் இருந்து வெளியே அனுப்பப்பட்டார்.

வெளியே வந்த ஜுலி, எங்கே சென்றாலும் மக்கள் அவரை அடித்து விரட்டியதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில், மறுபடியும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்ட ஜுலி, கடந்த வாரம் சுஜாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்றவுடன் நடந்த சம்பவங்களை விவரித்துக் கொண்டிருந்தார். அப்போது, தான் ஒருநாள் தோழியுடன் நகைக் கடைக்கு சென்றதாகவும், அங்கு தன்னை பார்த்த சிறுவன் ஓடிச்சென்று அந்த தெருவில் உள்ள அனைவரையும் கூட்டி வந்துவிட்டதாகவும் கூறினார்.

அவரை பார்க்க சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கூடிவிட்டதாகவும் கூறினார். எல்லோரும் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ஒருசில பேர் தன்னை அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஜுஸ் கொடுத்து உபசரித்ததாகவும் கூறினார். அவர் கூறியதை வைத்துப் பார்க்கும்போது, ஜுலியுடன் யாரும் நின்று போட்டோ எடுத்தது இதுவரை எந்த சமூக வலைத்தளத்திலும் வெளியாகவில்லை. எனவே, மறுபடியும் ஜுலி ஏதாவது பொய் சொல்லிக் கொண்டு திரிகிறாரா? என்ற விவாதமே போய்க் கொண்டிருக்கிறது.

ஆனால், நெட்டிசன்கள் கூறும்போது, 300-க்கும் மேற்பட்டவர்களை பார்க்கும்போது ஜுலியே ஓடி ஒளிந்து இருப்பார். இவர் எப்படி அவ்வளவு தைரியமாக அவர்கள் முன்னால் நிற்கமுடியும் என்றும் ஜுலியை கலாய்த்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் அனுப்பப்பட்ட ஜுலி திருந்தியிருப்பார் என்றால், அது சுத்தமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.