Connect with us

அரசியல்

ஜெயலலிதா நடத்திய முதலீட்டாளர் மாநாட்டில்… 14ஆயிரம் கோடி முதலீடு மட்டுமே வந்தது… ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்..

Published

on

கடந்த 2015ல் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் 2 புள்ளி 42 லட்சம் கோடி ரூபாய் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், அதில், 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மட்டுமே தொழில்கள் துவங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.தமிழக அரசு இதுவரை  நடத்திய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எவ்வளவு நிதி தமிழகத்தில்
முதலீடு செய்யப்பட்டன. எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை  விடுத்து வருகின்றன.

இது குறித்து சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட வினாக்களுக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

அதில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 2015ல் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் 2.42 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், டிசம்பர் 2018 வரை 62 ஆயிரத்து
738 கோடி ரூபாய்க்கு மட்டுமே முதலீடுகள் உறுதி  அளிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. இதில், 22 நிறுவனங்கள்  உற்பத்தி அல்லது சோதனை உற்பத்தி நிலையில் உள்ளது என்றும் கூறியுள்ளது.

இதில், உற்பத்தியை அந்த நிறுவனங்கள் உறுதியாக  தொடங்கியதா என்பதை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. வெறும் 14 ஆயிரத்து153 கோடி மட்டுமே முதலீடு வந்துள்ளது என்று
தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் 2015க்கு பிறகு தமிழ்நாட்டில் இருந்து வெளியேறிய நிறுவனங்கள் தொடர்பான,
தகவல்கள் இல்லை என்று தொழில் துறை பதில் அளித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜனவரியில் முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி தலைமையில் இரண்டாவது முதலீட்டாளர் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் ஜப்பான், கொரியா, பிரான்ஸ், தைவான், ஜெர்மனி, பின்லாந்து, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன. 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு, 3  லட்சத்து 431 கோடி ரூபாய்க்கு
முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த முதலீடுகள் நடைமுறைக்கு வரும் போது 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.அதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்குச் சென்று 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால்
தமிழக அரசு இதுவரை  நடத்திய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எவ்வளவு நிதி தமிழகத்தில் முதலீடு செய்யப்பட்டன. எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை  விடுத்து வந்தன.

இந்த நிலையில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 2015ல் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் 2.42 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதில், 62 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மட்டுமே முதலீடுகள் உறுதி  செய்யப்பட்டுள்ளது என்றும் 22 நிறுவனங்கள் மட்டுமே சோதனை அல்லது உற்பத்தியை தொடங்கியுள்ளன என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட வினாக்களுக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, லண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட  வெளிநாடுகள் பயணத்தின் மூலம் 8 ஆயிரத்து 830 கோடி ரூபாய் முதலீட்டை  திரட்டியதாக அறிவித்துள்ளார்.

0

அரசியல்11 mins ago

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு நன்றி கூறிய கார்த்திக் சிதம்பரம்…!

செய்திகள்4 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்5 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்5 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்5 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்6 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்15 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்16 hours ago

புதிய தோற்றத்தில் உலா வரும் அஜித்- ட்ரெண்டாகும் புகைப்படம்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending