பிரபல இயக்குனர் பாலா இயக்கிய ‘நாச்சியார்’ படத்தின் டீசரில் ஜோதிகா பேசிய ஒரு கெட்ட வார்த்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த ஒரே ஒரு வார்த்தையால் அவர் கோர்ட் படியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஆம், ‘நாச்சியார்’ படத்தில் அவர் பேசிய அந்த கெட்ட வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜோதிகா மற்றும் பாலாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு அனேகமாக வரும் திங்களன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலாவின் படம் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த ஒரே ஒரு வார்த்தை படத்திற்கு பெரிய விளம்பரமாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.