Tiktok Video – தற்கொலை செய்து கொள்வது போல் டிக்டாக் வீடியோ எடுக்க முயற்சி செய்து உயிருக்கு போராடிய இளம்பெண்ணின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

டிக்டாக் வீடியோவை பலரும் பயனபடுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்களுக்கு அதிக லைக் கிடைக்க வேண்டும் என சிலர் சாகசத்தில் ஈடுபட்டு சில சமயம் உயிரை இழப்பதும் உண்டு. சமீபத்தில் கூட ஒரு இளைஞர் பின்னால் டைவ் அடிக்க முயற்சி செய்து கீழே விழுந்து மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி வெளியானது.

இந்நிலையில், ஒரு இளம்பெண் டிக்டாக் வீடியோவிற்காக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வது போல் விளையாட்டாக முயற்சி செய்துள்ளார். ஆனால், கழுத்தில் கயிறு மாட்டி உயிர் பிழைக்க போராட்டினார். அதன்பின் அவரின் பெற்றோர் வந்து அவரை விடுவித்தனர். இதைக்கண்ட பலரும் டிக்டாக்கை தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.