அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முதலாவது பதவிக்காலத்திலேயே கொரியதீபகற்பத்திலிருந்து அணு ஆயுதங்களை அகற்றும் நடவடிக்கையை  பூர்த்தி செய்ய விரும்புவதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் அன் தெரிவித்துள்ளார்.

தென்கொரிய அதிகாரிகளிடம் இதனை தெரிவித்துள்ள கிம் ஜொங் அன் தென் கொரிய ஜனாதிபதியுடன் மூன்றாவது உச்சிமாநாட்டை மேற்கொள்வதற்கும் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  அமெரிக்காவில் அடையாளம் தெரியாத ரஜினி - வெளியான புகைப்படம்

செப்டம்பர் 18 ம் தேதி முதல் 20தேதி வரை வடகொரியாவில் இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிரம்பின் மீதான எனது நம்பிக்கையில் சிறிதும் மாற்றமில்லை என தெரிவித்துள்ள வடகொரிய ஜனாதிபதி அணு ஆயுதங்களை கைவிடுவதற்கும் இருநாடுகள் மத்தியிலான எரிச்சலான நிலையை முடிவிற்கு கொண்டுவருவதற்கும் தான் தயார் என குறிப்பிட்டுள்ளார்.