கும்பகோணம்: நள்ளிரவில் வழிதெரியாமல் தவித்த டெல்லி பெண் வங்கி ஊழியரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

டெல்லியில் தனியார் வங்கியில் 23 வயது இளம் பெண் பணியாற்றி வருகிறார்,. . இவருக்கு கும்பகோணத்தில் உள்ள அவரது வங்கியின் தலைமை அலுவலகத்தில் பதவி உயர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடப்பதாக இருந்தது. இதில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர், கடந்த 2ம் தேதி திருச்செந்தூர் ரெயிலில் இரவு 10.30 மணிக்கு கும்பகோணம் சென்றுள்ளார், அங்கு இரவு நேரத்தில் மழை பெய்ததால் ரயில் நிலையத்திலேயே அந்த இளம் பெண் காத்திருந்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் தோழிகள் வரவில்லை. இதையடுத்து ஓட்டலுக்கு செல்ல ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார். ஆனால் ஆட்டோ டிரைவர் வேறு பாதையில் வண்டியை ஓட்டியுள்ளார். இதனால் பயந்துபோன் இளம்பெண் கதறி அழுது கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆட்டோ டிரைவர் நடுவழியில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்.

அப்போது அந்த பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த 4 இளைஞர்களிடம் ஓட்டலுக்கு செல்ல வழிகேட்டுள்ளார். அந்த இளைஞர்களில் இரண்டுபேர் தங்களது பைக்கில் அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு மறைவான காட்டுப்பகுதியில் வைத்து கற்பழித்தனர். மற்ற இரண்டு நண்பர்களுக்கும் அந்த பெண் விருந்தாக்கினர்.

ஒருவழியாக வேறு ஆட்டோ மூலம் ஓட்டலுக்கு வந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த சம்பவத்தை சக தோழிகளிம் கூறி அழுதுள்ளார். தொடர்ந்து போலீசில் அந்த பெண் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த ரகசிய விசாரணையில் கும்பகோணம் மோதிலால் தெருவை சேர்ந்த  வசந்தன், அவருடைய நண்பர்களான தினேஷ் (24), புருஷோத்தமன் (19), அன்பரசன் (19) ஆகிய 4 பேரும் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து 4 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது இளம்பெண் கடத்தல், பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளார்கள்.