கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெருவிளையைச் சேர்ந்தவர் நீலசாமி (எ) நீலதங்கம் (45). ஓட்டுநர்.

நீலசாமியின் மூத்த சகோதரி அமராவதி. இதனிடையே, இவருக்கும் பாஸ்கரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் இடையே தவறான உறவு இருந்து வந்துள்ளது.

இந்த விவகாரம் நீலசாமிக்கு தெரியவர, தனது சகோதரி அமராவதியை கண்டித்துள்ளார்.

இதையடுத்து, தங்கள் உறவுக்கு நீலசாமி இடையூறாக இருப்பதை அமராவதியும், பாஸ்கரனும் விரும்பவில்லை.

அதனால், நீலசாமியை தீர்த்துக்கட்ட இருவரும் திட்டம் தீட்டினர். இதன்பின்னர், பாஸ்கரன் நீலசாமியை கோட்டவிளையில் உள்ள குடிநீர் கிணற்றுக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது, நீலசாமிக்கு மது ஊற்றி கொடுத்து, அவரின் கைகளை கட்டிய, பாஸ்கரன் அவரை கிணற்றுக்குள் தள்ளிவிட்டு கொலை செய்தார்.

இச்சம்பவம் குறித்து, காவல் துறையினர் வழக்குப்பதிந்து, அமராவதி மற்றும் பாஸ்கரன் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.