Connect with us

அரசியல்

தகுதி இல்லாத முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நினைத்து மக்கள் வெட்கம் வேதனை – தி.மு.கவின் துரைமுருகன் விமர்சனம்

Published

on

தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீர்மேலாண்மைக்கு தி.மு.க. ஆட்சியில் என்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன? என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அவர் வகிக்கும் துறையில், அவருக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாத ஒரு முதல்வர், பொதுப்பணித்துறை தனது அமைச்சராகப் பெற்றிருப்பது கண்டு தமிழக மக்கள் வெட்கமும் வேதனையும் கொள்கிறார்கள் என்றும்,

நீர்மேலாண்மைத் திட்டங்கள் நதிநீர்த் திட்டங்கள் நீர்த்தேக்கத் திட்டங்கள் என்று தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட எண்ணற்ற திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்ச்சி சிறிதும் இல்லாமல், கமிஷன் கலாசாரத்தில் முழுக்க முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்ற நிலையில் இருந்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக அமைந்தது தமிழகத்திற்குக் கெட்ட வாய்ப்பாகும் என்றும்,.

1967 முதல் 2011 வரை 41-க்கும் மேற்பட்ட அணைகளைக் கட்டி, தமிழகத்தின் நீர்மேலாண்மைக்கு மிகப்பெரிய கட்டமைப்பை உருவாக்கியது தலைவர் கருணாநிதி முதலமைச்சராகவும், நான் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்த தி.மு.க. ஆட்சி என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். நதிநீர் இணைப்புத் திட்டங்களின் முன்னோடி தி.மு.க. ஆட்சிதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2006 முதல் 2011 வரை ரூ.62,349 கோடி முதலீடுகளைப் பெற்று, அதன் மூலம் 2,35,464 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை வழங்கியது தி.மு.க. அரசு. தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலும், அம்பத்தூர் முதல் காஞ்சீபுரம் வரையிலும் நிறுவப்பட்டுள்ள தொழிற்சாலைகள் தி.மு.க. ஆட்சியின் சாதனைகளுக்கான சாட்சி. தி.மு.க. ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிட்டீர்கள் என்று தி.மு.க. தலைவரைப் பார்த்து ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

443 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு, ரூ.5.42 லட்சம் கோடி முதலீடு வரப்போகிறது என்று பகட்டு அறிவிப்பை வெளியிட்டு, இப்போது ரூ.14 ஆயிரம் கோடி மட்டுமே பெற்றுள்ள பழனிசாமிதான் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி வெளியாகி இருக்கும் இந்த ரூ.14 ஆயிரம் கோடி விவகாரத்தை முதலமைச்சரால் மறுக்க முடியுமா? மறுக்கட்டுமே பார்க்கலாம்.

10 அமைச்சர்களை அழைத்துக் கொண்டு முதலீடு பெற உலகச் சுற்றுலா போன வர்தான், தமிழக மக்களுக்கு வெள்ளை அறிக்கை வழங்க வேண்டும். வெள்ளை அறிக்கை கேட்பதோ, கொடுப்பதோ கெட்ட காரியம் அல்ல. இவர் வெள்ளை அறிக்கை கொடுப்பதற்கு, சட்டியில் எதுவும் இருந்தால் தானே அகப்பையில் வரும். அரசு நிர்வாகத்தின் அடிப்படை இலக்கணம் கூடத் தெரியாமல் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வைப் பார்த்து கேள்வி கேட்பது வேடிக்கையாக இருக்கிறது.

இந்தியா முழுவதும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் பொருளாதாரப் பின்னடைவு, தொழில் பின்னடைவு இல்லை என்று முதலமைச்சர் பீற்றிக் கொள்வதை உண்மை என்று யாரும் ஏற்கமாட்டார்கள். கோவையிலும், திருப்பூரிலும் கேட்டால் சொல்வார்கள், எத்தனை தொழில்கள் மூடப்பட்டிருக்கின்றன, எத்தனை ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர் என்ற விவரங்களைச் சொல்வார்கள். பத்திரிகையாளர்களைக் கேட்டாலும் பட்டியல் இட்டுத் தருவார்கள்.

எதற்காக முதலமைச்சர் பொருளாதார நிபுணராக வேடம் கட்டிக்கொள்ள வேண்டும்? சற்றும் பொருத்தமில்லாத வேடம் அது. எதையும் முழுமையாகத் தெரிந்துகொண்டு சொல்ல வேண்டும்; தெரியாத தகவல்களுக்குள் நுழையக் கூடாது.

ஜெயலலிதாவின் வாரிசு என்று யாரோ ஒருவர் சொன்னவுடன், அதை அருள் வாக்கு என்றெண்ணி, தாவிக் கூத்தாடிக் கொண்டாடக் கூடாது. தமிழக மக்கள் சொல்லிப் பாராட்ட வேண்டும்; அதுவரை காத்திருக்கப் பழக வேண்டும்.

ஆகவே, மாநிலத்திற்குள் ஓடும் நதிகளை இணைப்பது, காவிரி டெல்டா கால்வாய்களைத் தூர் வாருவத, ஏரி குளங்களைத் தூர் வாருவது, முதலீடுகளைப் பெறுவது, தொழிற்சாலைகளை அமைப்பது உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்திருக்கும் அ.தி.மு.க. ஆட்சியின் தற்போதையை முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. ஆட்சி பற்றியோ, முதலமைச்சராக இருந்த தலைவர் கருணாநிதி பற்றியோ, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றியோ, வெற்றிகரமாகத் திட்டங்களை நிறைவேற்றிய தி.மு.க. தலைவரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தோ அரைகுறையான கேள்வி எழுப்பி, எதிர்மறை விமர்சனம் செய்ய எவ்விதத் தகுதியுமில்லை, எந்த அருகதையுமில்லை என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். என்று தனது அறிக்கையில் திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

darbar
செய்திகள்1 hour ago

தீபாவளி வந்தாச்சு! தர்பார் வெடி வாங்கீட்டீங்களா? – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்3 hours ago

இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த ஆண்ட்ரியா: நீங்களே பாருங்க…

சினிமா செய்திகள்6 hours ago

எப்படி இருந்த நஸ்ரியா இப்ப இப்படி ஆயிடாங்களே…

செய்திகள்7 hours ago

ரோஹித் ஷர்மா & ரஹானே நான்காவது விக்கெட் பாட்னர்ஷிப் புதிய சாதனை

செய்திகள்7 hours ago

இப்படியா சொன்னார் லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர்?- பரவும் தகவல்

உலக செய்திகள்8 hours ago

சமூக வலைத்தளங்களை பயன்படுத்த வரி விதித்த அரசு..!!

செய்திகள்8 hours ago

சிக்ஸர் மூலம் டெஸ்ட் அரங்கில் உலக சாதனை படைத்த ஹெட் மேன் ரோஹித்

ஜோதிடம்10 hours ago

இன்றைய ராசிபலன்கள் 20.10.2019

nayanthara
செய்திகள்4 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்3 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்2 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

valimai
செய்திகள்1 day ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்21 hours ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

செய்திகள்3 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சின்னத்திரை1 day ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

Trending