மலேசியாவில் ரஜினியின் சாதனையை முறியடித்த தனுஷ்

03:07 மணி

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலையில்லா பட்டதாரி-2’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படம் தமிழில் வருகிற ஆகஸ்ட் 11-ந் தேதி வெளியாகவுள்ளது.  உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடவுள்ளனர். இந்நிலையில், மலேசியாவில் மட்டும் இப்படம் சுமார் 550 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மலேசியாவில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘கபாலி’ படம் 480 திரையரங்குகளில் வெளியானது. தற்போது அந்த சாதனையை தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி-2’ படம் முறியடித்துள்ளது. ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.

தனுஷ், அமலாபால், சமுத்திரகனி, பாலிவுட் நடிகை கஜோல் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணுவுடன் இணைந்து  தனுஷ் தனது வுண்டார்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இப்படம் தமிழகத்தில் சுமார் 450-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com