பவர் பாண்டி-யைத் தொடர்ந்து, தனுஷ் தற்போது இயக்கும் புதிய படத்தையும் தேனாண்டாள் நிறுவனமே தயாரிக்கிறது.

தனுஷ் இயக்கும் இப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை, இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

இதில் நாகர்ஜுனா, ஸ்ரீகாந்த், சரத்குமார், அதிதி ராவ் ஆகியோர் நடிக்க அவர்களுடன் தனுஷும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இப்படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்க நடிகை அனு இமானுவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன் அனு இமானுவெல் துப்பறிவாளன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்நிலையில், தனுஷ் நடிக்கும் வடசென்னை திரைப்படம் அக்டோபர் மாதம் ஆயுதபூஜையையொட்டி திரைக்கு வர உள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.