தனுஷ் ரசிகர்களுக்கு ஏற்பட்ட திடீர் அதிர்ச்சி

தனுஷ் நடித்த ‘விஐபி 2’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படம் சென்னை மட்டுமின்றி பல நகரங்களில் அதிகாலை காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான டிக்கெட்டுக்களும் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தற்போது திடீரென அதிகாலை 5 மணி காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

இதுகுறித்து ரோஹினி திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தனுஷின் ‘விஐபி 2’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் வெளிவர வேண்டும் என்று தயாரிப்பாளர் விரும்புவதால் அவருடைய விருப்பத்தை ஏற்று காலை 5 மணி காட்சி ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. எனவே இந்த படத்தின் முதல் காட்சி நாளை காலை 8 மணிக்கே தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.