தமிழ்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் சிவா அடுத்த திரைப்படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ரேடியோ தொகுப்பாளராக இருந்த சிவா, சென்னை 28 திரைப்படம் மூலம் நடிகராக மாறினார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்த அவருக்கு ‘தமிழ் படம்’ நல்ல மார்க்கெட்டை ஏற்படுத்தியது. ஒரு வருடத்திற்கு முன்பு தமிழ்படம் 2 வும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான கதையை அவரே எழுதியுள்ளார். இப்படத்தை எஸ்.பில் ஹாசிமின் இயக்கவுள்ளார். இப்படத்தில் ஜப்பானை சேர்ந்த சுமோ விளையாட்டு வீரர் யோஷினோரி டஷிரோ மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இப்படத்திற்கு பிரபல் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனருமான ராஜூவ்மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.