ஒரே நடிகர் நடித்த இரண்டு படங்கள் வெளிவருவதே அபூர்வமாக தமிழ் சினிமாவில் நடந்து வரும் நிலையில் ஒரே ஜோடி நடித்த இரு படங்கள் வெளிவரும் வாய்ப்பு நூலிழையில் மிஸ் ஆகிவிட்டது.

ஆம், ஜீவா, நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்த ‘கலகலப்பு 2’ திரைப்படமும், ‘கீ’ திரைப்படமும் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது

ஆனால் கடைசி நேரத்தில் கீ திரைப்படத்தின் தேதி மார்ச் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தேதியில் இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகியிருந்தால் ஜீவா, நிக்கிகல்ராணி ஜோடி ஒரு சாதனைக்கு சொந்தமாகி இருப்பார்கள்