தலைவா…வா.. தலைமையேற்க…வா…பரபரப்பு பேனர்..

வாங்க… தலைமை ஏற்க வாங்க… என்று மீண்டும் போஸ்டர் அடித்து பரபரப்பை பற்ற வைத்துள்ளனர் ரஜினி ரசிகர்கள்.

ரஜினியின் படத்துக்கு பிறகு அவரது ரசிகர்கள் மிகவும் விரும்புவது அவரது அரசியல் வருகையை தான். ஆனால் ரஜினியோ… அந்த வாடையே எனக்கு வேண்டாம் என்று உறுதியாக ஒதுங்கி உள்ளார். இருந்தாலும் தேரை இழுத்து தெருவில் விடும் கதையாக மீண்டும் போஸ்டர் ஒட்ட ஆரம்பித்துள்ளனர் சில ரசிகர்கள்.

அதில் தலைமை ஏற்க வாங்க… தொண்டர்கள் இருக்கிறோம் என்று சொல்ல… மீண்டும் ஒரு பரபரப்பு இந்த போஸ்டரால் ஏற்பட்டுள்ளது.