சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்துவிட்டது.

இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்த கீர்த்தி சுரேஷ், இன்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், படக்குழுவினர்களிடம் இருந்து கனத்த மனதுடன் விலகுகிறேன். இந்த படத்தில் நடித்தது சுகமான அனுபவம் என்று கூறியுள்ளார்.

மேலும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசர் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது