தி.மு.க. சார்பில் ஈரோட்டில் நடந்த ஆர்பாட்டத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தி.மு.க.வினர் மனு அளித்தனர். மேலும், ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டனர்

அப்போது மகளிர் அணியை சேர்ந்த பெண் தொண்டர் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.