நடிகை நமீதா தன்னுடைய காதலர் வீராவை திருமணம் செய்யவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் சற்றுமுன்னர் அவருடைய திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த திருமணம் வரும் 24ஆம் தேதி திருப்பதியில் உள்ள இஸ்கான் கோவிலில் நடைபெறவுள்ளதாக அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கு முன்னர் நவம்பர் 22ஆம் தேதி அதே திருப்பதியில் உள்ள ஒட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்த திருமணத்தில் கோலிவுட், டோலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது