தமிழ் சினிமாவில் 1980 களில் கொடிகட்டி பறந்தவர் சில்க் சுமிதா. தனது காந்த கண்களால் ரசிகர்களை கிறங்கடித்தவர். தமிழ் மட்டுல்லாது மற்ற மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.

அந்த காலகட்டத்தில் கவர்ச்சி என்றால் அது சில்க் சுமிதாதான். பல பரிமாணங்களில் நடித்து தனக்கென தனி இடம் ஒன்றை தக்கவைத்துக் கொண்டவர்.

புகழ் பெற்ற பல பிரபலங்களின் மரணத்தைப் போன்றே இவரின் மரணமும் மர்ம முடிச்சுகளாய் இருந்தன. இவர் கடந்த 1996-ஆம் ஆண்டு இறந்தார்.

இந்நிலையில், அவர் இறந்து 22 ஆண்டுகளுக்கு பிறகு, அவர் அறிமுகமான இயக்குனர் திருப்பதி ராஜனின் கடைசி படமான ‘ராக தாளங்கள்’ படத்தை வெளியிட முயற்சி நடக்கிறது. இப்படம் சில்க் ஸ்மிதாவுக்கும் கடைசி படமே ஆகும்.

இப்படம் 1995-ல் சாதி பிரச்சினையை பற்றி பேசி இருந்ததால் சென்சாரில் பிரச்னை ஏற்பட்டதால், ரிலீஸ் செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது.