துபாயில் விஜய்-அட்லி: ‘தளபதி 63’ கதை விவாதமா?

இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி பாஜகவினர் புண்ணியத்தில் சூப்பர் ஹிட் ஆனது. ரூ.200 கோடிக்கும் அதிகமாக தமிழில் வசூல் செய்த இந்த படம் தெலுங்கிலும் தற்போது வெளியாகி நல்ல வசூலை தந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் சமீபத்தில் ஈசிஆர் சாலையில் உள்ள விஜய்க்கு சொந்தமான பங்களாவில் இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. தற்போது மீண்டும் படக்குழுவினர் இரண்டாவது முறையாக வெற்றி விழாவை கொண்டாட துபாய் சென்றுள்ளனர்.

துபாய் கடற்கரையோர பகுதியில் விஜய், அட்லி மற்றும் படக்குழுவினர் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் துபாயில் அடுத்த படம் குறித்த கதை விவாதமும் நடைபெறுவதாக தகவல் வந்துள்ளதால் ‘விஜய் 63’ படத்தை மீண்டும் அட்லி இயக்குவார் என்று கூறப்படுகிறது.