துருவங்கள் பதினாறு பாணியில் விமல் நடிக்கும் படம்

05:24 மணி

பசங்க  படத்தின் மூலம் அறிமுகமானவர்  விமல். தொடந்து களவாணி, வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, கலகலப்பு ஆகிய படங்கள் பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. பல படங்கள் சுமார் ரகமாக இருந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுக்கவில்லை.  திருட்டு விசிடி முன்கூட்டியே வெளிவந்தும் ” மாப்ள சிங்கம் ” திரைப்படம் தமிழக திரையரங்குகளில் 5 கோடி ரூபாய் வசூல் செய்தது.   ஆனாலும் தனக்கு  பின்னால் வந்த சிவகார்த்தியேன்,விஜய் சேதுபதி  ஆகியோருடன் போட்டியிட வேண்டுமானால் அதற்கு மாஸ் ஹிட் படம் ஒன்று வேண்டும் என்று உணர்ந்தார் விமல்.

Loading...

இந்நிலையில் சரிந்து விழுந்த தன்னுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்தும் வகையில் இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் ” மன்னர் வகையறா ” என்ற படத்தை தயாரித்து வருகிறார் விமல். தன்னுடைய சொந்த படமாக இருந்தாலும் தனக்கான முக்கியத்துவத்தை குறைத்துக்கொண்டு ஆனந்தி, பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ ஷங்கர், சிங்கம் புலி, வம்சி கிருஷ்ணா, கார்த்திக், நீலிமா ராணி, ஜெய பிரகாஷ், என நட்சத்திர பட்டாளங்களை உடன் வைத்து கொண்டு பயணம் செய்கிறார்.

இதுவரை 70 சதவீத படப்பிடிப்புக்ள் நிறைவடைந்த  நிலையில் வர்தா புயல் பாதிப்பால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் “மாப்ள சிங்கம்” படத்திற்கு பிறகு “மன்னர் வகையறா” படத்தின் வெளியீட்டிற்கு பிறகே அடுத்த படத்தில் நடிப்பது என்று முடிவெடுத்திருந்த நடிகர் விமல் ” மன்னர் வகையறா ” திரைப்படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடித்து வரும் காட்சிகள் பெருமளவில் இருப்பதால் அவர்களை ஒருங்கிணைத்து படப்பிடிப்பை நடத்த காலதாமதமாகி வருவதால் நடுவில் ஒரு சிறிய படத்தை முடித்து விட திட்டமிட்டுள்ளார்.

தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ” துருவங்கள் பதினாறு ” பாணியில் குறும்பட இயக்குனர் ‘தரண்’ சொன்ன கதை பிடித்து போனதால் அவருக்கு கால்ஷீட் கொடுத்துல்ளார் விமல். படப்பிடிப்பு ஏப்ரல், மே அகிய இரு மாதங்களில் நிறைவடையும். அந்த படத்திற்கு துருவங்கள் பதினாறு படத்தின் பின்னணி இசையில் மிரட்டிய ஜாக்ஸ் மீண்டும் இந்த திரில்லர் படத்தில் கலக்க உள்ளார். நட்சத்திரங்கள், டெக்னீஷியன்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.

இந்த படத்தை மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன் தயாரிக்கிறார்.

(Visited 13 times, 1 visits today)
The following two tabs change content below.
கோ.வெங்கடேசன்

கோ.வெங்கடேசன்

இவர் கடந்த 7 ஆண்டுகளாக தமிழ் சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ் திரையுலகம் பற்றிய பல அறிய தகவல்களை தொகுத்து வங்குவதில் சிறப்பானவர். இவரை தொடர்புகொள்ள: 9715029812