Connect with us

செய்திகள்

தென்ஆப்பிரிக்காவை பதம் பார்த்த இந்திய பவுலர்கள் : வரலாற்று வெற்றி

Published

on

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 431 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் எல்கர் 160 ரன்களும் டி காக் 111 ரன்களும் கேப்டன் டுபிலிசிஸ் 55 ரன்களும் எடுத்திருந்தனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 7 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து, 71 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த மயங்க் அகர்வால் 7 ரன்னில் அவுட்டானார். இதனையடுத்து ரோகித் சர்மாவுடன் புஜாரா ஜோடி சேர்ந்து ஆடினார். அரை சதமடித்த புஜாரா 81 ரன்னில் வெளியேறினார். இரண்டாவது இன்னிங்சிலும் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். அவர் 127 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ரவீந்திர ஜடேஜா 40 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து இறங்கிய விராட் கோலியும், அஜிங்கியா ரகானேவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

கடைசியில், 67 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்திருந்த போது இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர்.

இதைத்தொடர்ந்து, 395 ரன்களை இலக்காக கொண்டு தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. நான்காம் நாள் நேற்று ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில்,கடைசி ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. அஷ்வின் மற்றும் ஜடேஜா விரைவில் விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து இறங்கிய முன்னணி வீரர்களை மொகமது ஷமியும், ஜடேஜாவும் விரைவில் அவுட்டாக்கினர். ரவீந்திர ஜடேஜா ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இதனால் நிலைகுலைந்த தென் ஆப்பிரிக்கா அணி 70 ரன்களை எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது.

கடைசி கட்டத்தில் செனுரன் முத்துசாமியும், டேன் பீட்டும் இணைந்து நிதானமாக ஆடினர். பீட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் அவுட்டானார். அப்போது தென் ஆப்பிரிக்கா 161 ரன்கள் எடுத்திருந்தது. இருவரும் இணைந்து 91 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Murugan
செய்திகள்1 hour ago

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகை -கொள்ளையன் முருகனிடம் திணறும் போலீசார்

divya darshani
செய்திகள்2 hours ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

செய்திகள்2 hours ago

பலான படத்தை 18 வயதிலேயே பார்த்தேன் – பிரியா பவானிசங்கர் பகீர் பேட்டி

சினிமா செய்திகள்4 hours ago

ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில்….ரம்யாவா இது?

செய்திகள்5 hours ago

மோடிக்கு அறிவுரை சொன்ன அழகிப் போட்டி பங்கேற்பாளர் – என்ன சொன்னார் தெரியுமா ?

vijayakanth
அரசியல்5 hours ago

விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரம் – கேப்டன் வரவால் தொண்டர்கள் மகிழ்ச்சி !

அரசியல்6 hours ago

என் பேச்சால் எழுவர் விடுதலைக்கு சிக்கல் இல்லை – சீமான் கருத்து !

செய்திகள்6 hours ago

வெற்றிமாறன் கைகோர்த்த அடுத்த தயாரிப்பாளர் – ஹீரோ யார் ?

nayanthara
செய்திகள்22 hours ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

bank
செய்திகள்2 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

silk smitha
செய்திகள்6 days ago

அச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ

செய்திகள்7 hours ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சினிமா செய்திகள்2 weeks ago

இதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…!

செய்திகள்1 week ago

தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு !

Trending