விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி’ சீரியல் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. குறிப்பாக அதில் நடித்து வரும் செம்பா, சின்னயா, சின்னயா என்று உருகுவது அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளது.

சீரியலில் சாந்த சொரூபியாக நடித்த நடிகை செம்பா, சமீபத்தில் நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வெகுவேகமாக வைரலாகி வருகிறது. குலசை தசரா நிகழ்ச்சியின்போது செம்பா ஆடிய ஆட்டம் தான் இது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் செம்பாவுக்கு சினிமா வாய்ப்பும் தேடி வந்து கொண்டிருக்கின்றதாம், ஆனால் சினிமாவில் துக்கடா வேடத்தில் நடிப்பதை விட சீரியலில் நாயகி வேடத்தில் நடிப்பதையே விரும்புவதாக அவர் கூறி வருகிறாராம்.