நடிகை நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்த திரைப்படங்கள், ஒரே நாளில் வெளியாகி மோதும் சுழ்நிலை உருவாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதியும், நயன்தாராவும் ஒன்றாக இணைந்து ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் நடித்தனர். அப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்நிலையில் நயன்தாரா நடித்துள்ள ‘டோரா’ படமும், இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் டி. ராஜேந்தர் ஆகியோர் நடித்துள்ள கவண் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.இதில் டோரா படம் பேய் படமாகும். கவண் ஒரு ஜனரஞ்சகமான படம் ஆகும்.

இந்த இரண்டு படங்களும் வருகிற மார்ச் 31ம் தேதி ஒரே நாளில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது. எனவே, இந்த 2 படங்களும் மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.