நாச்சியார் படத்தில் சைக்கோ கதாபாத்திரத்தில் ஜி.வி பிரகாஷ்…

01:29 மணி

இயக்குனர் பாலா இயக்கும் நாச்சியார் திரைப்படத்தில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் ஒரு சைக்கோ கொலையாளியாக நடிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

Loading...

தாரை தப்பட்டை படத்திற்கு பின் ஒரு வருட காலமாக எந்த படத்தையும் பாலா இயக்கவில்லை. தற்போது நடிகை ஜோதிகா மற்றும் ஜு.வி. பிரகாஷை வைத்து நாச்சியார் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இப்படத்தில் ஜு.வி.பிரகாஷ் ஒரு சைக்கோ கொலையாளி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

பாலா படம் என்றாலே, முக்கிய கதாபாத்திரம் ஒன்று மனநிலை பாதிக்கப்பட்டது போல்தான் இருக்கும். இதில் ஜி.வி.பிரகாஷுக்கு அந்த வேடத்தை கொடுத்திருக்கிறார் பாலா. தனது ஹீரோக்களை அப்படத்தின் கதாபாத்திரமாகவே மாற்றும் திறமை கொண்ட பாலாவிடம் ஜி.வி. பிரகாஷ் வசமாக சிக்கி சின்னா பின்னமாகப் போவது உறுதி என சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

(Visited 15 times, 1 visits today)
The following two tabs change content below.
மகாலட்சுமி
இவர் இணையதள செய்திகள் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சினிமா மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் கொட்டுப்பதில் முதன்மையானவர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பதில் சிறப்பு புலமை வாய்ந்தவர். சினிமா துறையில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பழம்பெரும் நடிக- நடிகைகள், இயக்குனர்கள் குறித்த சுவையான சம்பவங்களை தொகுத்து சிறப்பு கட்டுரைகளாக வழங்குவதில் பெயர் பெற்றவர். தொடர்புகொள்ள- mahamurugan@gmail.com